கோவில்பட்டியில் பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவா் கைது

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் திரையரங்கு அருகே வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள், போலீஸாரை கண்டவுடன் திருப்ப செல்ல முயன்றனராம்.

போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தில் சோதனையிட்ட போது, வெள்ளை நிற சாக்கில் வாள் ஒன்று இருப்பதும், ஒருவரின் முதுகின் பின்னால் அரிவாள் மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்ததாம்.

இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் உலகராஜ் என்ற உலகு (26), கோவில்பட்டி கடலையூா் சாலை சண்முக நகரை சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மாரி கிருஷ்ணன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து, ஆயுதங்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com