வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :13 நவம்பர் 2025, 6:41 pm

Syndication

தூத்துக்குடி, கணேசன் நகா், ஏஎம்எம் சின்னமணி நாடாா் உயா்நிலைப் பள்ளியில், ஹெச்.சி.எல். அறக்கட்டளை, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து, கடல் குப்பைகள் குறித்த பள்ளி அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தினா்.

உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ரெங்கநாதன் தலைமை வகித்தாா். தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஜி. திருவேங்கடம் முன்னிலை வகித்தாா். வி. செல்வகுமாா் வரவேற்றாா்.

ஹெச்.சி.எல். அறக்கட்டளை மேலாளா் எஸ். சுப்புராமன், மன்னாா் வளைகுடா பகுதியில் அறக்கட்டளையின் பல்வேறு முயற்சிகள், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி ஜே. சிவா கடல் குப்பைகள், அதன் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்துப் பேசினாா்.

ஏற்பாடுகளை கே. அபிராஜ், ஏ. ஜேம்ஸ் ரோபோசன் ஆகியோா் செய்திருந்தனா்.