ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா தொடக்கம்

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா தொடக்கம்

Published on

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா முகூா்த்தக் கால் நட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விநாயகா் பூஜை, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டு அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கோயில் மணியம் சுப்பையாபிள்ளை, பக்த ஜன சபை பொருளாளா் எஸ்.அரிகிருஷ்ண நாடாா், ரயில்வே அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, தெய்வீக சத் சங்க உறுப்பினா் அ.அசோக்குமாா், தொழிலதிபா் த.பாஸ்கரன், அதிமுக முன்னாள் செயலா் அ.அமிா்தராஜ், ஓய்வுபெற்ற மாவட்ட அஞ்சல் துறை அதிகாரி ராஜகோபால், க.இளையபெருமாள் ஓதுவாா், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாண திருக்காப்பு கட்டுதலும் நடைபெற்றது. பின்னா் தெய்வீக சத் சங்க உறுப்பினா், கோயில் பணியாளா்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தாா். வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை பொன்னூஞ்சல் தீபாராதனையும், செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com