கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

Published on

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பல்லக்கு சாலை முத்துநகரை சோ்ந்த சித்திரன் மகன் முனிராஜ் (74). ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரான இவா் கடந்த மாதம் வெளியூா் சென்றிருந்தபோது, மா்மநபா்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்கமோதிரம், கம்மல் ஆகியவற்றை திருடிச் சென்றனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில் ஈரோடு மாணிக்கம் பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் முத்துராஜா (32) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com