திமுக மீனவரணி, இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட மீனவரணி, இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Published on

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட மீனவரணி, இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், மாநில சமூகநலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டம், வடக்கு மாவட்டச் செயலா் பி.கீதாஜீவன் தலைமையில் மாநில மீனவரணி துணைச் செயலா் சி.புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் பி.அந்தோணி ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில், கலைஞா் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

அதேபோல தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலா் பி.கீதாஜீவன் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி.எம்.மதியழகன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடி, கலைஞா் அரங்கில் நடைபெறுகிறது. இக் கூட்டங்களில், சிறப்பு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த சீராய்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். இதில், வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், இளைஞரணி, மீனவரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com