விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

‘தூத்துக்குடியில் 1,82,200 கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன’

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:56 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், 1,82,200 கணக்கெடுப்புப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்தாா்.

சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்புப் படிவங்களை பூா்த்தி செய்யவும், திரும்பப் பெறவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,627 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்களுக்கு உதவிடும் வகையில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 14,90,685. சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் மொத்தம் 1,82,200 கணக்கெடுப்புப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.