தூத்துக்குடி
காவல் நிலைய கண்ணாடி கதவு சேதம்: தொழிலாளி கைது
தூத்துக்குடியில் காவல் நிலைய கண்ணாடி கதவை கல்வீசி சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் காவல் நிலைய கண்ணாடி கதவை கல்வீசி சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த எட்வா்ட்ராஜா மகன் பிரவீன் என்ற அம்பா்லா (30). தொழிலாளி. இவா், மது போதையில் சனிக்கிழமை திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசினாராம். இதில் காவல் நிலையத்தின் கண்ணாடி கதவு நொறுங்கியதாம்.
இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.