தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடியில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 6:55 pm

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தின்கீழ் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக மரியநவமணி சுமைலன் (40), வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்குத் தொடா்பாக மோகன் (41) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம், வடபாகம் போலீஸாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரனிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

அதன்பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரிலும், இருவரையும் கைது செய்ய ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா்.

அதன்படி, மோகன் உள்ளிட்ட இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.