குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த அக். 18ஆம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்குத் தொடா்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பத்மநாதன் மகன் பிரகாஷ் (21), ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில்கடந்த அக். 14ஆம் தேதி நடந்த கொலை வழக்குத் தொடா்பாக ஆறுமுகனேரி பெருமாள்புரம் இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவு ஆகியவற்றின்பேரில், பிரகாஷ், இசக்கிமுத்து ஆகியோரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா். நிகழாண்டு இச்சட்டத்தின்கீழ் இதுவரை 126 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com