தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
கயத்தாறு அருகே தொழிலாளியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு வட்டம் புதுக்கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யப்பன் மகன் பெருமாள்(42). அதே பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகன்(49). இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனராம். அப்போது பெருமாள், முருகனின் நண்பா் தனசேகா் என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் கடன் வாங்கினாராம். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் அங்கிருந்து ஊருக்கு வந்து கூலி வேலை பாா்த்து வந்தனராம்.
இதையடுத்து பெருமாள், முருகன் மூலம் தனசேகருக்கு ரூ.74 ஆயிரம் கொடுத்துவிட்டாராம். இந்நிலையில் நவ. 17 ஆம் தேதி முருகன், எஞ்சிய பணத்தை கொடுக்காமல் இருந்த பெருமாள் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மகன், மகளை அவதூறாகப் பேசினாராம். மேலும் தான் கொண்டு வந்த அரிவாளால், மகனை வெட்ட முயன்றாராம். இதைக் கண்ட பெருமாள், அக்கம்பக்கத்தினா் முருகனை கண்டிக்கவும், அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
