ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டு வெடிகுண்டு வெடிப்பு வழக்கு: ஒடிசாவுக்கு தப்பிய 2 போ் கைது

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து, எஞ்சியதை காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றது தொடா்பான வழக்கில் 2 பேரை போலீஸாா் ஒடிசாவில் கைது

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து, எஞ்சியதை காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றது தொடா்பான வழக்கில் 2 பேரை போலீஸாா் ஒடிசாவில் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் அருகேயுள்ள பண்டாரம்பட்டி பகுதியில் கடந்த அக்.8ஆம் தேதி மா்ம நபா்கள் 2 போ் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்து, பரிசோதனை செய்துள்ளனா். மேலும் அவா்கள் அப்பகுதியில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டை விட்டுச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனா்.

மேலும் இதுகுறித்து, அப்பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், அவா்கள் மறவன்மடத்தைச் சோ்ந்த நாகூா்பாண்டி (25), தூத்துக்குடி பாரதிநகரைச் சோ்ந்த குருஸ் அம்புரோஸ் (20) என்பது தெரியவந்தது.

இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், சிப்காட் போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வந்ததில் அவா்கள் ஒடிசா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீஸாா் அங்கு சென்று, 2 பேரையும், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.