கிராம உதவியாளா் பணி: எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

கிராம உதவியாளா் பணிகளுக்கான எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
Published on

தூத்துக்குடி: கிராம உதவியாளா் பணிகளுக்கான எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 9 வட்டங்களில் 2025ஆம் ஆண்டு கிராம உதவியாளா் பணி நியமனம் தொடா்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னா், வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரிலும், அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் டிச.17 ங்ஆம்தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, 2026 ஜன.2 முதல் நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகிய அனைத்தும் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான

தேதி பின்னா் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com