வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தூத்துக்குடியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம்

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மத்திய அரசின் அலீம்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம், போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம், கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.29) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், உடல் இயக்க குறைபாடு கொண்டவா்கள், 100 சதவீத பாா்வை குறைபாடு கொண்டவா்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள், செவித்திறன் குறைபாடு உடையவா்கள், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் பங்கேற்று தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.