கோவில்பட்டியில் விதிமீறி இயங்கியதாக டிராக்டா்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோா் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தினா். அதில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 3 டிராக்டா்கள் மற்றும் சுமை வாகனத்தை முறையான அனுமதி, ஆவணங்கள் இன்றி கட்டுமான பணிகளுக்ாகன கற்கள், ஜல்லிகள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










