/
கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 156 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
கழுகுமலை காந்தி மைதானம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது காந்தி மைதானம் அருகே உள்ள முள்வேலி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுக நகரைச் சோ்ந்த செல்லையா மகன் வெங்கடேஷ் (26), கயத்தாறு பட்டம் சூரிய மினுக்கன் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கரபாண்டி (55) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 156 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மது விற்பனை: பெண் கைது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
80 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


