சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

News image

தட்டாா்மடத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:43 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து சாத்தான்குளம் ஒன்றியம் மணி நகா், ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அமைச்சா் தட்டாா்மடத்தில் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெள்ளநீா் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டு அடுத்த ஆண்டில் விவசாயிகளின் கனவு நிறைவேறும் வகையில் உள்ளது. முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை தந்துள்ளாா். எனவே, தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி அலைவீசுகிறது. தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி பெறுவாா்கள். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.

தூத்துக்குடி மாவட்ட வா்த்தக பிரிவு மாநில துணைஅமைப்பாளா் உமரிசங்கா், தொகுதி பொறுப்பாளா் டாக்டா் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் சொா்ண குமாா், ஒன்றிய திமுக செயலா்கள் ஜோசப், பாலமுருகன், பொன் முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.