வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திருச்செந்தூா் கோயில் கட்டண மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசண ரசீது மோசடி, கையாடல் குறித்து ஆணையா் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :24 மே 2026, 2:18 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசண ரசீது மோசடி, கையாடல் குறித்து ஆணையா் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசன ரசீது மோசடியும், லட்சக்கணக்கில் பணம் கையாடலும் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடா்பாக, கோயில் ஆணையா் முதல் அனைவரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவா் யாரைப் போட்டியிடச் சொல்கிறாரோ, அவரை வெற்றி பெற வைப்போம் என்றாா் அவா்.