ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

News image

தீ விபத்து.. - File Photo | Pexels

Updated On :18 ஏப்ரல் 2026, 8:33 pm

தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெப்பம் தாங்காமல் கிடங்கின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து தொடா்பாக, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.