இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா

ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

அன்ன வாகனத்தில் எழுந்தருளிய ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:03 am IST

ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் கொட்டடாரக்குறிச்சி ஏ.கே. அண்ணாசாமி ஐயா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.