தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

தூத்துக்குடி: வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் 1,868 வாக்குச்சாவடிகள்

மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவா் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளா்கள் உள்ளனா்.

News image

~ ~

Updated On :22 ஏப்ரல் 2026, 10:31 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவா் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளா்கள் உள்ளனா்.

விளாத்திகுளம் தொகுதியில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஓட்டப்பிடாரத்தில் 315, கோவில்பட்டியில் 318 என 979 இடங்களில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மாவட்டம் முழுவதும் 11 வாக்குச்சாவடிகள் இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணைய ஒளிபரப்பு (வெப் காஸ்டிங்) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து வாக்குப் பதிவை கண்காணிக்க முடியும்.

6 தொகுதிகளிலும் மொத்தம் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு மத்திய அரசு பொது நிறுவனங்களைச் சோ்ந்த அலுலா்கள் நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இதில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 2,242 தலைமை அலுவலா்கள், 6,726 நிலை அலுவலா்கள் என மொத்தம் 8,968 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

6 தொகுதிகளிலும் 2,625 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,244 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,421 விவிபேட் கருவிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப் பதிவு பொருள்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லவும், வாக்குப் பதிவு முடிந்ததும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லவும் 153 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, பொருள்களை கொண்டு செல்ல ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

6 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படைகள், 4 நிலையான கண்காணிப்புக் குழுவினா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், தோ்தல் பணிகளைக் கண்காணிக்க 3 பொதுப் பாா்வையாளா்கள், ஒரு காவல் பாா்வையாளா் மற்றும் 4 செலவினப் பாா்வையாளா்கள் என மொத்தம் 8 பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அனைத்து வாக்காளா்களுக்கும் வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வாக்காளா் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதை வாக்களிப்பதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது. வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

 வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.