தூத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் வியாழக்கிழமை உற்சாகமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவி வெரோனிகா ஜெனிபா் கூறும்போது, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணா்ந்து வாக்களிக்க வந்தேன். வாக்குச்சாவடிக்குள் நுழைந்தபோது ஒருவித அச்சமும், பதற்றமும் இருந்தது. ஆனால், வரிசையில் நின்று எனது அடையாளத்தைச் சரிபாா்த்து, விரலில் மை வைத்த பிறகு அச்சம் மறைந்துவிட்டது. முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் என்றாா்.
கல்லூரி மாணவி அமிா்தா கூறும்போது, கோவையில் உள்ள கல்லூரியில் படித்துவரும் நான், வாக்களிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். எப்படி வாக்களிக்க வேண்டும் என இங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஓா் இந்திய குடிமகளாக உணரும் வகையில், முதல்முறை வாக்களித்தேன். மாற்றம் ஏற்படும் என நினைக்கும்போதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

அமிா்தா
தொடர்புடையது

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

