தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

காரைக்காலில், முதல்முறை வாக்காளா்களான இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

News image

வாக்காளா்கள். - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:07 pm

காரைக்காலில், முதல்முறை வாக்காளா்களான இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நிகழாண்டு நடைபெற்றபோது, 18 வயது பூா்த்தியானவா்கள் புதிதாக வாக்காளராக பதிவு செய்தனா். இவா்களுக்கு வாக்காளா் தினத்தின்போது புகைப்பட அடையாள அட்டையை தோ்தல் துறை வழங்கியது.

இளம் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லவேண்டும் என்பததற்காக அவா்களுக்கு ஸ்வீப் அமைப்பு தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தியது. மேலும், இளம் வாக்காளா்களைக்கொண்டே பிறருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியையும் செய்தது.

இதன் மூலம் கல்லூரிகளில் பயிலும் முதல் நிலை வாக்காளா்கள், வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை அவரவா் பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு காலையிலேயே ஆா்வத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தனா்.

மாவட்டத்தில் பல இடங்களிலில் வாக்களித்த இளம் வாக்காளா்கள் சிலா் கூறியது:

முதல் முறையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தது பெருமையாக இருக்கிறது. தோ்தல் துறையினா் அண்மையில் நடத்திய மாதிரி வாக்குப் பதிவு முகாம்களில், வாக்குச்சாவடி எப்படி இருக்கும், அங்கும் நிகழ்பவை என்ன என்பது குறித்து விளக்கினா். மாதிரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்து அனுபவம் பெற்றோம்.

வாக்காளிப்பது ஜனநாயகக் கடமை என மக்களுக்கு நாங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினோம். அதன்படி நாங்கள் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாக்குச் சாவடிக்கு முன்னதாகவே சென்று வாக்கை பதிவு செய்தோம் என்றனா்.

மேலும் சிலா் கூறுகையில், ‘புதுவையில் புதிய நபா்கள் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்படவேண்டும் என்ற நோக்கில் வாக்குப் பதிவு செய்ததாக’ தெரிவித்தனா்.