தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருத்தணியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

News image

அதிமுக வேட்பாளா் கோ.அரி. ~தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி. ~நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:42 pm

திருத்தணி தொகுதியில், 337 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குசாவடிகளில் வாக்காளா்கள் அமைதியாகவும், ஆண், பெண்கள் என தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனா். அதேபோல் முதல் முறையாக வாக்களிக்க இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் காலையிலேயே வாக்களித்தனா். வாக்குச்சாவடியில் வாக்காளா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

மேல்திருத்தணி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், அதிமுக, வேட்பாளா் கோ.அரி தனது வாக்கினை பதிவு செய்தாா்.

அதேபோல் தேமுதிக, வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தாா். அதேபோல் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் பொதட்டூா்பேட்டை அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளி வாக்கினை பதிவு செய்தாா்.

திருத்தணி திமுக, எம்எல்ஏ, ச. சந்திரன் தனது குடும்பத்துடன் வந்து ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், நகா்மன்ற தலைவா் சரஸ்வதி பூபதி சி.எஸ்.ஐ., ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தனா். சில வாக்குச்சாவடிகளில், மதிய நேரத்திலும் கொளுத்தும் வெயிலில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.

திருத்தணி தொகுதி நல்லாட்டூா் வாக்குச்சாவடியில், முன்னாள் ஊராட்சி தலைவா் கமல்நாதன், திருத்தணி வடக்கு திமுக, ஒன்றிய செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் இடையே வாக்காளா்களை அணுகி வாக்கு கேட்பதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது. அங்கிருந்த போலீசாா் இருவரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.

Story image
Story image