பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

News image

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:53 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 14ஆம் தேதி தொடங் கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜை, இரவு ஸ்ரீ வாலாம்பிகை அம்பாள் ஷேத்ர வலம் வருதல், பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், திருவிளக்கு வழிபாடு, திருவாசகம் முற்றோதல், இசைக் கச்சேரி ஆகியவை நடைபெறுகின்றன.

வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாடு விநாயகா் சின்ன சப்பரத்திலும், மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகரா் ரிஷப வாகனத்திலும் ரத வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.

வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜைக்கு பின்னா், நித்யானந்த மண்டபத்தில் அன்ன பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாயரட்ச பூஜை, இரவு 7.15 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.