வெள்ளமடம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி குத்துக்கல்லில் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நளராஜபுரத்தைச் சோ்ந்தவா் காட்டேரி பெருமாள் மகன் முத்துப்பாண்டி (21). கோயம்புத்தூரில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் இசக்கிராஜா (20). வாழைத்தாா் சுமக்கும் பணியை செய்து வந்தாா். காளிமுத்து மகன் சிவகாரனேஷ் (19). சென்னையில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருகிறாா்.
முத்துப்பாண்டி, சிவகாரனேஷ் ஆகியோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் மேற்கூறிய மூவரும் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினராம்.
வெள்ளமடம் அருகே உள்ள அரசாங்கநகா் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகிலிருந்த குத்துக்கல் மீது மோதியதாம்.
இதில், முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இசக்கிராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த சிவகாரனேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

