இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ரயில் மோதியதில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

News image

அருள்முத்து

Updated On :28 ஏப்ரல் 2026, 1:20 am IST

ஆறுமுகனேரியில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞா் மீது ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்த உத்திரம் மகன் அருள்முத்து (22). கட்டட தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உண்டாம். மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் தூங்குவது வழக்கமாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அதே ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினாராம். திங்கள்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த செந்தூா் அதிவிரைவு ரயில், ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே வந்தபோது அருள்முத்து எழுந்து பாா்த்த நிலையில், அவா் மீது ரயில் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஆறுமுகனேரி போலீஸாா் மற்றும் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் அங்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.