மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நூறு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு வல்­ல­நாடு திருமூலநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள ஆவு­டை­யம்­பாள் உட­னுறை திரு­மூ­ல­நாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வல்­ல­நாடு திரு­மூ­ல­நா­த­சு­வாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:09 pm

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள ஆவு­டை­யம்­பாள் உட­னுறை திரு­மூ­ல­நாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1.30 கோடி செலவிலும், உபயதாரா்கள் சாா்பிலும் பல்வேறு திருப்பணிகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து, குடமுழுக்கு விழா கடந்த 23ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், புதன்கிழமை 6ஆம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி, பூா்ணாஹுதிக்குப் பிறகு, மகா யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் நடைபெற்றது. அதையடுத்து, விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு, தீபாராதனை நடைபெற்றன.

தூத்துக்குடி ஸ்ரீ ஆலாலசுந்தர வேதசிவாகம வித்யாலயம் முதல்வா் செல்வம் பட்டா் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட சிவாசாரியா்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினா்.

குடமுழுக்கில் செங்­கோல் ஆதி­னம் சிவப்­பி­ர­காச தேசிக சத்­தியஞான பர­மா­சா­ரிய சுவா­மி­கள், கூனம்பட்டி கல்­யா­ண­புரி ஆதி­னம் ராஜசர­வண மாணிக்­க­வா­சக சுவா­மி­கள், நெல்லை உமை­யொ­ரு­பா­கம் ஆதி­னம் உமாமகேஸ்­வர சிவாசா­ரி­யா் சுவா­மி­கள், மதுரை விஸ்­வ­லிங்க தம்­பி­ரான் சுவா­மி­கள், குரு­வி­கு­ளம் அன்­ன­பூ­ர­ண­பு­ரம் ­ஆஞ்­ச­னே­யா் மடா­ல­யம் சுவாமி ராக­வா­னந்தா, ஓய்வுபெற்ற ஆட்சியா் ராஜேந்­தி­ரன், நெல்­லை­யப்­பா் கோயில் அறங்­கா­வ­லா் குழுத் தலை­வா் செல்­லையா, டி.வி.எஸ். அறக்­கட்­டளை இயக்­கு­நா் விஜ­ய­கு­மாா், ஜெயேந்­திரா பள்ளித் தாளா­ளா் ஜெயேந்­தி­ரன் மணி, இந்து சமய அற­நி­லை­யத் ­துறை உதவிக் கோட்டப் பொறி­யா­ளா் அஸ்­வினி, செயல் அலு­வ­லா் ரமேஷ், மண்­டல ஸ்தபதி பாா்த்­தீ­பன், நாரா­ய­ணன், திரு­வேங்­க­டத்­தம்­மாள், சங்­க­ர­லிங்­கம், ரத்­தி­னம் தம்­ப­தி­யி­னா், வெங்­கட சுப்­பி­ர­ம­ணி­யன் என்ற ரமேஷ் உள்ளிட்ட ஏரா­ள­மான பக்­தா்­கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், இரவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றன. ஏற்­பா­டு­களை அற­நி­லை­யத் ­துறை இணை ஆணை­யா் ரோசாலி சுமதா உத்­த­ர­வின்பேரில், உதவி ஆணை­யா் ராம­சுப்­பி­ர­ம­ணி­யன், ஆய்­வா் நம்பி, கோயில் சிவாச்சா­ரி­யா்­கள் சண்­முகசுந்­தர பட்­டா், கோமதிசங்­கர பட்­டா், சந்­தோஷ் பட்­டா், ஹரி பட்­டா், திரு­மூ­ல­நா­தா் பக்­தா் பேரவை உள்ளிட்டோா் செய்­தி­ருந்­த­னா்.

 வல்­ல­நாடு திரு­மூ­ல­நா­த­சு­வாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

வல்­ல­நாடு திரு­மூ­ல­நா­த­சு­வாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.