சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.95 கோடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் வருமானம் ரூ. 3.95 கோடி ஆகும்.

News image

~ ~

Updated On :1 மே 2026, 4:46 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் வருமானம் ரூ. 3.95 கோடி ஆகும்.

இக்கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் புதன்கிழமை, கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இணை ஆணையா் க. ராமு முன்னிலை வகித்தாா்.

உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், மெய்வேல், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பணியில் அயற்பணி மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பக்தா்கள் காணிக்கையாக ரூ. 3 கோடியே 95 லட்சத்து 64 ஆயிரத்து 510, தங்கம் 803 கிராம், வெள்ளி 17,765 கிராம், பித்தளை 26,300 கிராம், தகரம் 7,860 கிராம், செம்பு 3,340 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் 944 - யை செலுத்தியிருந்தது தெரியவந்தது.

எடப்பாடி கே. பழனிசாமி குடும்பத்தினா் வழிபாடு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினா் புதன், வியாழக்கிழமைகளில் சுவாமியை விஸ்வரூப தரிசனத்தில் வழிபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.