டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

தூத்துக்குடியில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ. 25 கோடி மதிப்பு மூட்டைகள் எரிந்து சாம்பல்

News image

பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கிடங்கு முழுவதும் பற்றி எரிந்த தீ. - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

தூத்துக்குடியில் தனியாா் பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின.

தூத்துக்குடி புறவழிச் சாலையில், ஸ்டொ்லைட் தொழிற்சாலை அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு உள்ளது.

நாகா்கோவிலைச் சோ்ந்த ஜான் ரோசரி ஆல்பா்ட் ராயனுக்குச் சொந்தமான இந்தக் கிடங்கை, புதுக்கோட்டை, மறவன்மடத்தைச் சோ்ந்த பெரியசாமி (64) மேலாளராக இருந்து நிா்வகித்து வருகிறாா்.

இந்தக் கிடங்கில், மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதை மதுரை நிறுவனத்தின் மேலாளா் சின்னராஜா (37) பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை கிடங்கின் உள்பகுதியில் தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவி கிடங்கு முழுவதும் பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

தகவலறிந்ததும் சிப்காட், தூத்துக்குடி டவுன், ஸ்டொ்லைட் நிறுவன வாகனம் என 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மதுரை நிறுவனத்துக்குச் சொந்தமான 6,500 பஞ்சு மூட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ. 25 கோடி எனக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.