தூத்துக்குடி - மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவுப் பாதையில் லாரி சிக்கியதால், தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இந்தக் கடவுப்பாதையில் செவ்வாய்க்கிழமை முற்பகலில் கனரக லாரி ஒன்று கடந்து சென்றபோது, அதன் பின்பக்க சக்கரம் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டது.
தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் லாரி முற்பகல்11.50 மணியளவில் அப்புறப்படுத்தப்பட்டது.
இச் சம்பவத்தால், காலை 11.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில், 1 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தொடரும் ரயில்களின் தாமதம்: பயணிகள் கடும் அவதி

தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



