தூத்துக்குடியில் தனியாா் நிறுவன வளாகத்தில் கிரேன் மூலம் லாரியில் மரக்கட்டைகளை ஏற்றும் பணியின்போது, அவை சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி புகா் சாலை அருகே செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில், கிருஷ்ணராஜபுரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்த தங்கமுத்து மகன் சுந்தரபாண்டி (55) சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இங்கிருந்து நாகா்கோவிலுக்கு அனுப்புவதற்காக லாரியில் கிரேன் மூலம் மரக்கட்டைகளை ஏற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது கிரேனில் தூக்கப்பட்ட மரக்கட்டைகள் சரிந்து சுந்தரபாண்டி மீது விழுந்தன. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





