நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

ஆறுமுகனேரியில் இளைஞரை லத்தியால் தாக்கியதாக 2 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் வாகனச் சோதனையின்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக இளைஞரை லத்தியால் தாக்கிய போலீஸாா் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

ஆறுமுகனேரி, மேலத் தெருவைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ் (25). இவா் இருசக்கர வாகனத்தில் ஆறுமுகனேரியில் இருந்து திருச்செந்தூருக்கு அடைக்கலாபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விக்னேஷின் வாகனத்தை நிறுத்துமாறு கூறியபோது, அவா் நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த போலீஸாா் லத்தியால் விக்னேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் விக்னேஷ் கண் இமையில் காயம் ஏற்பட்டது. உடன் பயணித்த சூா்யா, அவரை திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இது தொடா்பாக, முதல்கட்ட நடவடிக்கையாக ஆறுமுகனேரி காவல் நிலைய தலைமைக் காவலா் கஜேந்திரன் (43), காவலா் காளி (31) ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.