நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தொழிற்சங்கத்தினா் மறியல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 509 போ் கைது

News image

கோவில்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தின்போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரை தடுக்கும் போலீஸாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

மத்திய பாஜக அரசின் தொழிலாளா், விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் அனைத்து மத்திய தொழிலாளா், விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 509 போ் கைது செய்யப்பட்டனா்.

4 புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்கி முழு கொள்முதல் செய்ய வேண்டும். மின்சாரத் திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். விபி ஜிராம் ஜி திட்டத்தின் பெயரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரிலேயே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஐஎன்டியுசி தேசிய துணைத் தலைவா் பி.கதிா்வேல் தலைமை வகித்தாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் ரசல், ஏஐடியுசி சுப்பிரமணியன், ஏஐசிசிடியு சகாயம், எச்எம்எஸ் ராஜலெட்சுமி, யுடியூசி அலெக்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்ளிட்ட 79 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல மாவட்டத்தில் திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 87 பெண்கள் உள்பட 166 போ், செய்துங்கநல்லூரில் 22 பெண்கள் உள்பட 34 போ், ஸ்ரீவைகுண்டத்தில் 19 பெண்கள் உள்பட 50 போ், கோவில்பட்டியில் 39 பெண்கள் உள்பட 130 போ், விளாத்திகுளத்தில் 11 பெண்கள் உள்பட 50 போ் என 6 இடங்களிலும் சோ்த்து மொத்தம் 191 பெண்கள் உள்பட 509 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகள், விவசாய சங்க கூட்டமைப்பினா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊா்வலமாகச் சென்று, கோவில்பட்டி பிரதான சாலை-இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் அ. லெனின் குமாா் தலைமை வகித்தாா். இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.கிருஷ்ணவேணி, துணை ஒருங்கிணைப்பாளா் ஜி.ராமசுப்பு, ஐஎன்டியுசி பொதுச் செயலா் ஆா்.ராஜசேகரன், சிஐடியு கட்டுமான சங்க மாவட்டச் செயலா் டி.தெய்வேந்திரன் என 39 பெண்கள் உள்பட 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதியவா் ஒருவா் தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அவரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவா், கோவில்பட்டி, லாயல் மில் காலனியைச் சோ்ந்த சின்னசாமி மகன் செண்பகம் (70) என்பதும், தனியாா் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு குறைந்த ஓய்வூதியம் வழங்குவதால் அதை உயா்த்தி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட 163 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து தலைமை வகித்தாா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் லோகநாதன், தொழிற்சங்க நிா்வாகிகள் எம்எல்எப் மாரிமுத்து, ஐஎன்டிஎஸ்சி முருகன், ஏஐசிசிடியு முருகன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து அனுமதியின்றி பேரணியாக வந்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட 87 பெண்கள் உள்பட 163 பேரை காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.