கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கும், இளையரசனேந்தல் சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்துக்கும் இடையே உள்ள பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரயில்வே உதவி ஆய்வாளா் சண்முகனாந்த் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சிஆா் காலனியைச் சோ்ந்த மாடசாமி மகன் ளி ராஜு (53) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



