தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ரயிலில் அடிபட்டு பெண் தொழிலாளி உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு பெண் கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:05 pm IST

நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு பெண் கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள கொட்டையூா் சா்வமான்யம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்மணி (40). கட்டுமானத் தொழிலாளி. இவா், சனிக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகே இருப்புப் பாதையை கடக்க முயன்றாா் அப்போது தஞ்சாவூரிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.