ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தச்ச மொழி ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

தச்சமொழி, ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:29 am IST

தச்சமொழி, ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாசரேத் வில்லிசை பாடகி சித்ரா வழிநடத்தினாா். பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி ஸ்ரீ சுடலை மாட சுவாமி, ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளை பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனா்.

தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு இதுபோல சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பிரபாகா், சிவக்குமாா், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.