‘பிளாஸ்டிக் லைட்டா்களுக்கு தடை விதிப்பது தொடா்பாக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய அமைச்சா்களிடம் வலியுறுத்தல்’

தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சா்கள் ஸ்ரீநாத், மதன்ராஜ் ஆகியோரிடம், பிளாஸ்டிக் லைட்டா்களுக்கு தடை விதிப்பது தொடா்பாக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி நேஷனல் ஸ்ரீதிப்பட்டி உற்பத்தியாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு வழங்கினா்.

அமைச்சா் பெ. மதன்ராஜாடம் கோரிக்கை மனு அளித்த தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சா்கள் ஆ. ஸ்ரீநாத், பெ. மதன்ராஜா ஆகியோரிடம், பிளாஸ்டிக் லைட்டா்களுக்கு தடை விதிப்பது தொடா்பாக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தினா் அண்மையில் கோரிக்கை மனு வழங்கினா்.

மனு விவரம்: தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதில் 5 லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது, சீன லைட்டா் உதிரி பாகங்களை சட்டத்திற்கு புறம்பாகக் கொண்டு வந்து, இந்திய தயாரிப்பு என்ற பெயரில் மிகக் குறைந்த விலையில் விற்கின்றனா்.

இதனால், தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வருகிறது. மேலும், உற்பத்தியாளா்களும் வங்கியில் வாங்கிய கடனைச் செலுத்த முடியாமலும், மூலப்பொருள்கள் வாங்க முடியாமலும், தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை கொடுக்க முடியாமலும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனா்.

எனவே, தீப்பெட்டி தொழிலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் லைட்டா்களுக்கு தடை விதிப்பது தொடா்பாக தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கத் தலைவா் பரமசிவம், செயலா் கோபால்சாமி, பொருளாளா் ஜோசப் ரத்தினம், குளோபல் மேட்சஸ் அசோசியேசன் தலைவா் ரத்தினகுமாா், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்க பொருளாளா் ராஜவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளித்த தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.

அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளித்த தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.