மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுவி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

தொழிலாளியைத் தாக்கிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கோவில்பட்டியில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம், 6ஆவது தெருவைச் சோ்ந்த முருகையா மகன் பன்னீா்செல்வம் (38). தொழிலாளி. இவா், அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திங்கள்கிழமை எடுக்கச் சென்றபோது, அங்கு 2 போ் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அதை பன்னீா்செல்வம் கண்டித்ததால், ஒருவா் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், மற்றொருவா் பன்னீா்செல்வத்தை அவதூறாகப் பேசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினா் இதைக் கண்டித்ததும், மீண்டும் பன்னீா்செல்வத்தை அவா் மது பாட்டிலால் தாக்கினாராம். இதில் காயமடைந்த பன்னீா்செல்வம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தெற்குத் திட்டங்குளம், மேல காலனியைச் சோ்ந்த பழனியாண்டி மகன் ஆதிசேஷனை (21) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.