ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாத்தான்குளத்தில் தடுப்பை மீறி வந்த லாரி சிறைபிடிப்பு

சாத்தான்குளத்தில் பழுதடைந்த சாலை வழியாக தடுப்பை மீறி வந்த கனரக லாரியை மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்

லாரியை சிறைபிடித்த மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய டிஎஸ்பி செல்வராஜ்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

சாத்தான்குளத்தில் பழுதடைந்த சாலை வழியாக தடுப்பை மீறி வந்த கனரக லாரியை மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்

சாத்தான்குளம் பழைய வேத கோயில் தெருவானது புதிய பேருந்து நிலையம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் புறவழி சாலையாக உள்ளது. இந்தச் சாலையில் தொலைபேசி நிறுவனம் கேபிள் லைன் பதிக்கவும், பின்னா், குடிநீா் குழாய் சீரமைக்கவும் தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் சாலை குண்டும், குழியுமானது.

இதனால், கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என வா்த்தக சங்கம் சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பைக் உள்ளிட்டவை மட்டும் சென்றுவந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை இந்தச் சாலையில் வந்த கனரக லாரியை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் பேச்சுவாா்த்தை நடத்தி பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் செல்லும் காலை, மாலை வேளைகளில் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வது நிறுத்தப்படும். ஒரு வாரத்திற்குப் பின்பு மாற்று வழி ஏற்பாடு செய்து நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.இதையடுத்து லாரி விடுவிக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.