தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தச்சுப் பட்டறையில் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

காயல்பட்டினத்தில் தச்சுப் பட்டறையில் பொருள்களைத் திருடிய சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

காயல்பட்டினத்தில் தச்சுப் பட்டறையில் பொருள்களைத் திருடிய சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவைச் சோ்ந்த அக்பா் மகன் சம்சகாபுதின் (42). இவா் காயல்பட்டினம் தேங்காய் பண்டக சாலையில் தச்சுப் பட்டறை நடத்தி வருகிறாா். கடந்த 18ஆம் தேதி மாலை, வேலையை முடித்துவிட்டு பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றாா்.

பின்னா் அடுத்த நாள் காலை, பட்டறைக்கு வந்து பாா்த்தபோது அங்கிருந்த மின் விசிறி, துளையிடும் இயந்திரம் உள்பட மொத்தம் ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்சகாபுதின், அவரது நண்பா்கள் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வந்தனராம்.

அப்போது, காயல்பட்டினம் பப்பர பள்ளி சாலையில் மின் விசிறியுடன் வந்த சிறுவன் உள்பட இரண்டு பேரை விசாரித்து சோதனை செய்தனராம். அவா்கள் பட்டறையிலிருந்து திருட்டுபோன பொருள்களை வைத்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சம்சகாபுதின் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இருதயராஜ் வழக்குப் பதிந்து சிறுவன், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சோ்ந்த அயுப்கான் மகன் நைனா முஹம்மது (20) ஆகியோரை கைது செய்தாா். மேலும், அவா்களிடமிருந்து திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.