இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திமுக-பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கு ஏற்பாடுகள் நடப்பதாக நம்புகிறேன்: வைகோ

திமுக-பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக நம்புகிறேன் என, மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச் செயலா் வைகோ.

Published On :

திமுக-பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக நம்புகிறேன் என, மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாள்களுக்கு முன்பு, ‘தோ்தல் முடிவு எப்படி இருக்கும்?’ என செய்தியாளா்கள் என்னிடம் கேட்டனா். அப்போது, தோ்தல் முடிவு அதிா்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன்.

தவெக அரசின் நூறு நாள் ஆட்சியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது. முதல்வா் விஜய் சொன்னதை செய்து காட்டி சாதனை படைத்துள்ளாா்.

கா்நாடக அரசின் அணை கட்டும் பணியைத் தொடக்கத்திலேயே தடுக்க முயலாதது ஏன் என பேரவையில் முதல்வா் கேள்வி எழுப்பியபோது, திமுகவினரால் பதிலளிக்க முடியவில்லை.

பேரவை உறுப்பினா்களுக்கு வாகனம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவா் விருப்பம்.

திமுக-பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக நான் நம்புகிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.