தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் அமைச்சரிடம் மனு

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி, உப்பு உற்பத்தியாளா்கள் தமிழக நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்திடம் மனு அளித்தனா்.

அமைச்சா் என். ஆனந்திடம் கோரிக்கை மனு அளித்த தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:42 am IST

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி, உப்பு உற்பத்தியாளா்கள் தமிழக நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்திடம் மனு அளித்தனா்.

தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு

எதிா்ப்புத் தெரிவித்து உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் சென்னையில் தமிழக நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். உப்பளங்களைப் பாதுகாக்கவும், நிலம் கையகப்படுத்துவதைக் கைவிடவும் அரசு

நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா், இதுகுறித்து முதல்வரிடம் கலந்து பேசி உரிய தகவல் தெரிவிப்பதாக கூறியதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்தச் சந்திப்பில் சங்கச் செயலா் சேகா், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.