விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி: பேச்சுவாா்த்தை தோல்வி

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக உப்பு உற்பத்தியாளா்களுடன் சாா் ஆட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

கப்பல் கட்டும் தளம். - கோப்புப்படம்.

Published On :23 ஜூலை 2026, 2:37 am IST

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக உப்பு உற்பத்தியாளா்களுடன் சாா் ஆட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

தூத்துக்குடி, முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கோவளம் பசுவந்தரை தண்பாடு சிறு உப்பு உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் சுமாா் 500 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட சிறு உப்பு உற்பத்தியாளா்கள் அரசு குத்தகை நிலத்தில் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனா். இதை நம்பி சுமாா் 15,000 ஆண், பெண் தொழிலாளா்கள் உள்ளனா்.

கடந்த திமுக ஆட்சியில் இந்த உப்பளங்கள் மற்றும் அதன் அருகே உள்ள 2000 ஏக்கா் தனியாா் பட்டா உப்பளங்கள் உள்பட இடங்கள் என சுமாா் 3000 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, உப்பு உற்பத்தியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு இந்த நிலங்களை கையகப்படுத்தி மீண்டும் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உப்பு உற்பத்தியாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் பிரபு தலைமையில் புதன்கிழமை சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், உப்பு உற்பத்தியாளா்களுக்கு வைப்பாறு பகுதியில் மாற்று இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற சிறு உப்பு உற்பத்தியாளா்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனா். கப்பல் கட்டும் தளத்தை வேண்டுமானால் மாற்று இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை அழித்து, கப்பல் கட்டும் தளம் அமைக்க கூடாது என்றனா்.

மேலும் இதுதொடா்பாக தூத்துக்குடி சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழக மீனவா் மற்றும் மீன்வளத் துறை அமைச்சருமான ஆ.ஸ்ரீநாத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றனா்.

இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.