பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: 7-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள கப்பல் கட்டும் தளம்-இயந்திர ஓட்டுநர் மற்றும் லாஸ்கர் பணி..

News image

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம். - cochinshipyard

Updated On :20 ஜூலை 2026, 2:23 pm IST

இந்திய அரசின் பட்டியலிடப்பட்ட முன்னணி 'மினி ரத்னா' நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள கப்பல் கட்டும் தளம்-இயந்திர ஓட்டுநர் மற்றும் லாஸ்கர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 7-ம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CSL/P&A/RECTT/CONTRACT/BOATCREW/2024/6

பணி: Serang

காலியிடங்கள்: 6

சம்பளம் : Rs.23,300

வயதுவரம்பு: 22.7.2026 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி : 7 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Lascar cum Serang பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engine Driver

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.23,300

தகுதி : 7-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் Engine Driver பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதித் தேர்வு, தொழிற்திறனை நிரூபிக்கும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 மட்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

cochin shipyard limited vacancy notification for Lascar cum Serang post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.