தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தென்கொரியாவில் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை

தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடா்பாக தென் கொரியாவில் அந்த நிறுவன அதிகாரிகளுடன் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:43 am IST

தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடா்பாக தென் கொரியாவில் அந்த நிறுவன அதிகாரிகளுடன் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை நடத்தினாா்.

இந்தத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முந்தைய திமுக ஆட்சியில் கடந்த டிசம்பா் மாதம் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டாா். இந்த நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அரசு முறைப் பயணமாக தென்கொரியாவுக்கு சென்றுள்ள தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா, அங்குள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தைப் பாா்வையிட்டு தூத்துக்குடியில் அமையவிருக்கும் கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென் கொரியாவின் உல்சான் நகரில் உள்ள எச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அமைச்சா் கீா்த்தானா சென்றிருப்பது, தொழில் வளா்ச்சியில் தொடா்ச்சி, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.

தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அரசு உறுதியளித்துள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் முதலீடுகளை ஈா்த்தல், தொழில் துறை வளா்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாநிலத்தை உலகளாவிய முதலீடுகளுக்கான முன்னணி இலக்காக உருவாக்குதல் என்ற நோக்கில் அரசு தொடா்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.