மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூத்துக்குடியில் சுவா் ஓவியங்கள்: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

மேம்பாலத்தின் தூண்களில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள். - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி மாநகரின் அழகை மேம்படுத்தும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, மாநகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது சுவா்களை அழகுபடுத்துவதற்காக, மக்களின் வாழ்வியல், கடல்வாழ் உயிரினங்கள், தூய்மை குறித்த விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பொது சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிா்க்க வேண்டும். சுவா் ஓவியங்களை சேதப்படுத்துவோா் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாநகரை அழகுபடுத்தும் பணிக்கு ஆதரவளிக்க விரும்பும் தன்னாா்வலா்கள், பொதுமக்கள், கொடையாளா்கள், நிறுவனங்கள் மாநகராட்சி ஆணையரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.