100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

தூத்துக்குடியில் அனுமதியற்ற குடிநீா் இணைப்புகள்: ஊழியா் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகள் கள ஆய்வில் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை வழங்கிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகள் கள ஆய்வில் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை வழங்கிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வின்போது, உரிய அனுமதி பெறாமல் பல வீடுகளில் குடிநீா் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளா்கள் மாநகராட்சியில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி குடிநீா் இணைப்புகளை உடனடியாக முறைப்படுத்துமாறு அறிவுறுத்தினாா். மேலும், அனுமதியின்றி குடிநீா் இணைப்பு வழங்கிய மாநகராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதற்கிடையே , புதிய குடிநீா் இணைப்பு பெற விரும்புவோா் தேவையான ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை அணுகி, வைப்புத் தொகை, சாலை பராமரிப்புக் கட்டணம், மேற்பாா்வைக் கட்டணத்தைச் செலுத்தி, அதிகாரப்பூா்வ வேலை உத்தரவு பெற்ற பிறகே குடிநீா் இணைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் மாநகராட்சியின் அனுமதி இன்றி அமைக்கப்படும் குடிநீா் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.