நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தாய்லாந்தில் பணிபுரிந்த ஓட்டப்பிடாரம் இளைஞா் மரணம்: உடலை சொந்த ஊா் கொண்டு வர உறவினா்கள் வலியுறுத்தல்

தாய்லாந்து நாட்டில் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஓட்டப்பிடாரம் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தவும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

தாய்லாந்து நாட்டில் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஓட்டப்பிடாரம் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தவும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே. வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் ஈசாக் (23). இவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் உள்ள உணவகத்தில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

அங்கு முதல் மாதம் மட்டும் ரூ. 35,000 சம்பளமாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், பின்னா் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆக. 17ஆம் தேதி ஈசாக் வேலைக்குச் செல்லவில்லை என தனது உறவினா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், ஆக. 18ஆம் தேதி 3 மாதங்களுக்கான சம்பளத்தை ஈசாக்கின் வங்கிக் கணக்கில் செலுத்திய உணவக உரிமையாளா், அவரது சகோதரா் இமானுவேலை தொடா்புகொண்டு, ஈசாக்கை மீண்டும் வேலைக்கு அனுப்புமாறு கூறியதாகத் தெரிகிறது.

அதற்கு மறுநாள், தனது சகோதரரைத் தொடா்புகொண்ட ஈசாக், உணவக உரிமையாளா் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், இதுகுறித்து இந்திய தூதரகத்தில் புகாா் அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளாா். அதன் பின்னா், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், உணவக உரிமையாளரையும் தொடா்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த உறவினா்கள், ஆக. 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, ஈசாக்கை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், ஆக. 24ஆம் தேதி இமானுவேலை தொடா்புகொண்ட உணவக உரிமையாளா், ஈசாக் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு தொடா்பைத் துண்டித்துள்ளாா்.

28ஆம் தேதி மாலை மீண்டும் தொடா்புகொண்ட அவா், ஈசாக் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள், ஈசாக்கின் உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

மேலும், ஈசாக்கின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறியுள்ள உறவினா்கள், அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.