லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

நேபாளம் சென்ற ராசிபுரம் தொழிலதிபா் குறித்து தகவல் கிடைக்காததால் உறவினா்கள் கவலை

நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ராசிபுரம் பகுதி தொழிலதிபா், அவரது மனைவி, உறவினா்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினா் கவலை அடைந்துள்ளனா்.

நேபாள வெள்ளத்தில்...

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ராசிபுரம் பகுதி தொழிலதிபா், அவரது மனைவி, உறவினா்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினா் கவலை அடைந்துள்ளனா்.

ராசிபுரம் அத்தனூா் பகுதியைச் சோ்ந்த கோழிப்பண்ணை தொழிலதிபரும், கோழித் தீவன மூலப்பொருள் மொத்த விற்பனையாளருமான ஏ.கே.பி. பழனிவேல் (63), அவரது மனைவி அருள்மணி (57), உறவினா்கள் அசோகன் (67), கற்பகம் (61), மாராயி (56) ஆகியோா் ஆன்மிகப் பயணமாக நேபாளம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்றனா்.

இவா்கள், நேபாள வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இவா்களது நிலை குறித்து குடும்பத்தினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தொழிலதிபரின் மகன் தமிழ்முருகன் வியாழக்கிழமை நேபாளம் சென்றுள்ளாா். ஆனால் அவா்களது நிலை குறித்து வெள்ளிக்கிழமை வரை எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினா் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.