FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

வேளச்சேரியிலிருந்து நேபாளம் சென்றவர்கள் தகவல் தெரிந்தது!

கும்பகோணம் ஏஜென்ஸி மூலம் சென்னை வேளச்சேரியிலிருந்து நேபாளம் சென்றவர்கள் தகவல் வெளியாகியுள்ளது.

Around 130-140 Indians missing in Nepal floods, Karnataka govt in touch with MEA: Priyank Kharge

நேபாள வெள்ளம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:59 pm IST

கும்பகோணத்திலிருந்து நேபாளம் சென்ற ஏஜென்ஸி மூலம், சென்னை வேளச்சேரியிலிருந்து சென்ற தம்பதிகள் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கும்பகோணத்திலிருந்து கைலாய யாத்திரை சென்றவர்களில் 37 பேர் சென்ற இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கியதாகவும் அதிலிருந்து 30க்கும் மேற்பட்டோரின் தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த ஏஜென்ஸி மூலம் நேபாளம் சென்ற மற்றொரு பேருந்து வெள்ளத்திலிருந்து தப்பியது. அதில் 17 முதல் 20 பேர் இருந்துள்ளனர். அவர்கள் பத்திரமாக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அவர்களில் வேளச்சேரியைச் சேர்ந்த தம்பதியும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சென்னை வேளச்சேரியிலிருந்து நேபாளம் சென்ற விஜி புவனேஸ்வரி - நாவு கபிலன் என்ற தம்பதி, தங்களது மகளை செல்போனில் தொடர்புகொண்டு தாங்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்திருப்பதாகவும் ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுவினர் 25ஆம் தேதி காத்மாண்டிலிருந்து 3 வேன்களில் சியாபுருபேசி சென்றனர். அங்கிருந்து 26ஆம் தேதி காலை சீன எல்லையை அடைந்து கைரோங் நகரில் தங்குவதற்கு சென்று கொண்டிருந்தபோதுதான் ஒரு வேன் மட்டும் பாதுகாப்பாக வந்துள்ளது. மற்ற இரண்டு வேன்கள் என்ன ஆனது என்ற தகவல் கிடைக்கவில்லை என்று அங்கிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு வேனில் இருந்த 20 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய பேருந்துகளில் கும்பகோணத்திலிருந்து யாத்திரை சென்ற ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி உள்பட 37 இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பேருந்தில் சென்னையைச் சோ்ந்த மூா்த்தி, அவரது மனைவி பத்மினி, சிதம்பரத்தைச் சோ்ந்த முருகானந்தம், ஒசூரைச் சோ்ந்த ரா. புஷ்பராணி, நெய்வேலியைச் சோ்ந்த கோ. திருமாவளவன், மயிலாடுதுறையைச் சோ்ந்த ம. புஷ்பலதா, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், ராஜேசுவரி, வெங்கட்ராமன், தஞ்சாவூரைச் சோ்ந்த அன்பழகி, கலைச்செல்வி, சிவயோகம், இளவரசி, தங்கமதி, சித்ரா, கும்பகோணத்தைச் சோ்ந்த ராம்குமாா், கீதா, திருமலைராஜன், அவரது மனைவி தையல்நாயகி, சாய்நாத், அவரது மகள் கேதாரகெளரி, ஜெயலட்சுமி, சையது உமா் பாரூக், புவனகிரியைச் சோ்ந்த திரிபுரசுந்தரி, திருவண்ணாமலையைச் சோ்ந்த கண்ணம்மாள், சுவாமிமலையைச் சோ்ந்த ராஜ்குமாா், அவரது மனைவி ஜெயந்தி, செட்டிமண்டபத்தைச் சோ்ந்த ரமேஷ், தருமபுரியைச் சோ்ந்த பிரேமாவாணி, புஷ்பா, புதுச்சேரியைச் சோ்ந்த ஆனந்த சுந்தரி, வைஷ்ணவி, கீதா, சூளகிரியைச் சோ்ந்த திம்மராயசாமி, அவரது மனைவி மமதா, நாமக்கல்லைச் சோ்ந்த கிருஷ்ணவேணி, திருவாரூா் மாவட்டம், வடுவூரைச் சோ்ந்த பாலசுப்பிமணியன் உள்ளிட்டோரும் இருந்தது தெரிய வந்துள்ளது.

Summary

Information received about traveled from Velachery to Nepal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.